search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமூக வலைதளத்தில் குழு தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்
    X
    சமூக வலைதளத்தில் குழு தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்

    சமூக வலைதளத்தில் குழு தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம்- பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்

    கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என 1000 தம்பதிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை தவிர திருமணம் ஆகாதவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாவட்டம் கருக்காச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் அவர் கூறியதாவது:-

    எனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துகிறார். இதற்கு உடன்படாததால் என்னை கொடுமைபடுத்துகிறார்.

    எனது கணவரின் நண்பர்களும், அவர்களின் மனைவியரை இதுபோல மாற்றி கொள்கிறார்கள். இதற்காக சமூக வலைதளத்தில் குழு அமைத்து செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

    இந்த புகாரில் கூறப்பட்ட தகவல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதனை விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். சைபர் கிரைம் போலீசார், புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் தனியாக குழு அமைத்து அதில் மனைவிகளை மாற்றி உல்லாசம் காண்பதில் விருப்பம் உள்ளவர்களை உறுப்பினர்களாக இணைத்து இருப்பது தெரியவந்தது.

    இக்குழுவில் கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என 1000 தம்பதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை தவிர திருமணம் ஆகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    திருமணம் ஆகாதவர்கள் உல்லாசத்தில் ஈடுபட அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குழுவை தொடங்கியவர்களுக்கு வருமானமும் கிடைத்துள்ளது.

    இந்த தகவல்களை திரட்டிய போலீசார் முதற்கட்டமாக இக்குழுவை சேர்ந்த 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 25 பேரை கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்களும் கைதாவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி உயர் அதிகாரிகள் கூறும்போது, வெளிநாடுகள் மற்றும் மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதுபோன்ற மனைவிகளை மாற்றும் சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது இந்த பழக்கம் கேரளாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் ஈடுபடுவோர் அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் இதுபோன்ற குழுக்கள் அமைத்து மனைவிகளையும், இளம்பெண்களையும் மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய தகவல்களை தொடர்ந்து திரட்டி வருகிறோம்.

    அவர்கள் அனைவரையும் கண்காணித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றனர்.

    Next Story
    ×