என் மலர்
இந்தியா

பப்ஜி
தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன்-தம்பி ரெயில் மோதி பலி
ஜெய்பூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன் - தம்பி ரெயில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், ராகுல்.
அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் பப்ஜி விளையாட்டு மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள். குடும்பத்தினர்கள் கண்டித்தும் எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.
லோகேஷ், ராகுல் இருவரும் போட்டித்தேர்வுக்காக படித்து வந்தனர். இதற்காக படிக்க செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கள் தங்கள் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடினார்கள்.

தீவிரமாக பப்ஜி விளையாட்டில் கவனம் செலுத்தியதால் அந்த தண்டவாளத்தில் தூரத்தில் ரெயில் வருவதை அவர்கள் அறியவில்லை. ரெயில் என்ஜின் டிரைவர் ஒலியெழுப்பியும் அண்ணன், தம்பி இருவரும் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவர்கள் மீதும் ரெயில் மோதியது. சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
இதையும் படியுங்கள்...நீட் தேர்வை பா.ஜனதா ஆதரிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் - கனிமொழி
Next Story






