search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு புகைப்படம்
    X
    கோப்பு புகைப்படம்

    நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - வலுக்கும் எதிர்ப்பு

    நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தலைமையில் 5 நபர் கொண்டு குழு அமைக்கப்பட்டது.
    புது டெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.
     
    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

    இதையடுத்து நாகாலாந்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சமூக அமைப்புகளும், அம்மாநில அரசும் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    மக்கள் போராட்டம்

    கடந்த டிசம்பர் 4-ம் தேதி நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து சுரங்கத் தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு அம்மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்பாவி மக்கள் மரணிப்பதற்கு காரணமாக இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுக்க தொடங்கினர்.

    இதையடுத்து டிசம்பர் 20-ம் தேதி நாகாலாந்து சட்டமன்றத்தில்  வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாகலாந்தில் இச்சட்டத்தை திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தலைமையில் 5 நபர் கொண்டு குழு அமைக்கப்பட்டது.

    மேலும் ராணுவ வீரர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நீதி பெற்று தரும் வகையில் மாநில அரசால் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவ வீரர்கள் மீது மாநில அளவிலான குழுவால் எப்படி முழுமையான விசாரணை நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    Next Story
    ×