search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள்
    X
    தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

    உள்துறை அமைச்சக வாசலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா

    பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த இளைஞரணி தலைவர் சயானி கோஷ், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து சயானி கோஷை போலீசார் கைது செய்தனர். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் பிரசாரம் செய்வதற்கான சட்ட  உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று திரிபுரா காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. திரிபுராவில் ஆளும் பாஜக ஆதரவாளர்கள், தங்கள் வேட்பாளர்களை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

    Next Story
    ×