search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி காற்று மாசு
    X
    டெல்லி காற்று மாசு

    டெல்லியில் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது

    தேவைப்பட்டால் காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது.  டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு உத்தவிட்டது. மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. 

    டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

    இந்நிலையில், காற்றின் தரம் சீரடையாததால் பள்ளகிள் அனைத்தும்ட தொடர்ந்து மூப்பட்டிருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது, ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×