search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை
    X
    திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை

    பலத்த மழையால் திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை முழுவதும் கடும் சேதம்

    வெள்ளப்பெருக்கு, பலத்த மழை காரணமாக திருமலைக்குச்செல்லும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாறைகள் அடித்துச் செல்லப்பட்டதில் மண்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதை மார்க்கத்தை உடனடியாக சீரமைத்த தேவஸ்தானம் வாகன போக்குவரத்தை நேற்று முன்தினம் மாலை முதல் அனுமதித்து வருகிறது.

    ஆனால் நடைபாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை முழுவதும் பாறைகளும், கற்களும் விழுந்துள்ளன. பல இடங்களில் திடீர் நீர் வீழ்ச்சி உருவாகி தண்ணீர் கொட்டி வருகிறது. சேதமடைந்த நடைபாதைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒரு மாத காலம் தேவைப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தவிர திருப்பதி- திருமலையில் மழை தொடர்வதால் அலிபிரி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் பாதை உள்ளிட்டவை தேவஸ்தானம் மூடியுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் மாலை முதல் அதிகாலை வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது


    Next Story
    ×