search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள கூடாது - பிரியங்கா காந்தி

    நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்கள் மற்றும்  மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொள்ளும் 56-வது மாநாடு லக்னோவில்  அமைந்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் இன்றும் நாளையும் (நவம்பர் 20,21) நடக்கிறது.

    இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

    இந்த நிலையில் விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கக்கூடாது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

    இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை இருந்தால், லக்னோவில் நடைபெறும் டிஜிபி மற்றும் ஐஜி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது. லகிம்பூர் கேரி வழக்கில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவருடன் மேடையைப் பகிரக் கூடாது.

    பிரதமர் மோடி

    குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் மந்திரியின் மகன் என்பதால் அரசியல் அழுத்தம் காரணமாக உத்தரப்பிரதேசம் அரசு நீதியை நசுக்க முயன்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பம் நீதியை விரும்புகிறது. இந்த நிலையில் அஜய் மிஸ்ரா மந்திரியாக தொடர்ந்தால் நீதி வழங்கப்படாது.

    மேலும் நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    Next Story
    ×