என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  பீகாரில் கார் மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  பாட்னா:

  பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து சிலர் ஜமுய் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, லக்கிசராய் மாவட்டம், சிகந்திரா - ஷேக்புரா மாநில நெடுஞ்சாலையில் கார் வந்துக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இதையடுத்து காரின் உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. அவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

  இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


  Next Story
  ×