search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணீஷ் சிசோடியா
    X
    மணீஷ் சிசோடியா

    டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்... துணை முதல்வர் வேண்டுகோள்

    கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து  காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால்  உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும், கட்டுமான பணிகள் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் என்ஜினை ஆப் செய்வது மற்றும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நாளாவது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற சிறிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், டெல்லியை ஆரோக்கியமான மற்றும் மாசு இல்லாத நகராக மாற்ற முடியும், என்றார்.

    நாமாக முன்வந்து மாசுபாட்டைக் குறைப்பது நமது கடமை என்று கூறிய சிசோடியா, டெல்லியை மாசு இல்லாத நகரமாக மாற்ற, ஒவ்வொரு குடிமகனும் மாசுபாட்டைக் குறைக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    “தொழில்துறை மற்றும் கட்டுமான தொழில் செய்வோர், மாசுபாட்டின் பங்களிப்பை குறைக்க வேண்டும். கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய கட்டுமானத் தளங்களில் மாசுக்கட்டுப்பாட்டு கருவியை நிறுவி, தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். தொழில்துறையும் அதன் மாசுபாட்டின் பங்கைக் குறைப்பதற்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சமீபத்திய வளங்களை நோக்கி நகர வேண்டும்” என்றும் அமித் ஷா பேசினார்.

    Next Story
    ×