search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை- மருத்துவ நிபுணர்கள் தகவல்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு டெல்டா வைரசின் மாறுபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை வகைகளாகும்.

    புதுடெல்லி:

    சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பல வகைகளாக உருமாற்றம் அடைந்தது. இதுவரை ஆயிரக்கணக்கான உருமாற்றங்கள் அடைந்துள்ளது. அதில் ஒருசில உருமாற்ற வைரஸ்கள் வீரியம் கொண்டதாக இருக்கின்றன.

    அந்த வகையில் 2 முறை உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக மாறியது. அதுதான் இந்தியாவில் 2-வது அலையை ஏற்படுத்தியது.

    தற்போது இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கியது. டெல்டாவில் இருந்து உருமாறிய ஏஒய்.4.2 வைரஸ் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.

    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏஒய்.4.2 வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதாகவும், அது சிலரை தாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

    ஏஒய்.4.2 வைரசால் கவலை இல்லை என்று இந்திய மருத்துவ நிபுணர் குழுவான ‘இன்சாக்‘ சமீபத்தில் தெரிவித்திருந்தது. 28 தேசிய ஆய்வகங்களின் கூட்டமைப்பு இதுவாகும்.

    இந்த நிலையில் இந்தியாவில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடையவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழுவான இன்சாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது:-

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு டெல்டா வைரசின் மாறுபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை வகைகளாகும். டெல்டா வைரஸ் (பி.1.6177.2 மற்றும் ஏஒய்.எக்ஸ்) மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் புதிதாக உருமாற்றம் அடையவில்லை. ஏஒய்.எக்ஸ் என்பது 1-25 வரையிலான துணை கோடுகளின் குடும்பத்தை குறிக்கிறது.

    தற்போது அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு டெல்டாவின் உருமாற்றம் தான் காரணம். புதிதாக எதுவும் உருமாற்றம் அடையவில்லை.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை எடுத்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இங்கிலாந்தில் மெதுவாக அதிகரித்து வரும் பாதிப்புக்கு டெல்டா வைரசின் துணை பிரிவான ஏஒய்.4.2 காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது எங்கிருந்து எப்போது தோன்றியது என்பது தெளிவாக தெரியவில்லை. இது இந்தியாவில் மிகவும் அரிதான ஒன்றாகும்.

    இவ்வாறு அந்த அமைப்பை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×