என் மலர்

  செய்திகள்

  இரவு நேர ஊரடங்கு ரத்து
  X
  இரவு நேர ஊரடங்கு ரத்து

  கொரோனா பாதிப்பு குறைந்ததால் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
  பெங்களூரு:

  கர்நாடகத்தில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வந்தது. பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இரவு நேர ஊரடங்கை திரும்ப பெற வேண்டும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்்தனர்.

  இந்த நிலையில், கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்வது குறித்து நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோசித்தது. நிபுணர்கள் குழுவினரின் பரிந்துரைப்படி கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

  மாநிலம் முழுவதும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

  இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
  Next Story
  ×