என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 12,161 பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,965 ஆக உயர்வடைந்து உள்ளது.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தும் குறைந்து வருகிறது.
இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,161 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 90,394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
ஒரே நாளில் 17,862 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,43,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 155 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,965 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
Next Story