என் மலர்

  செய்திகள்

  என்கவுண்டர் நடந்த பகுதி
  X
  என்கவுண்டர் நடந்த பகுதி

  பந்திபோரா என்கவுண்டர்... பாஜக தலைவரை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் உள்ளூரில் பயங்கரவாத பயிற்சி பெற்றதும், ஒருவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளது.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் வாத்னிரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவன், பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி மற்றும் அவரது குடும்பத்திரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவன்.

  கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் உள்ளூரில் பயங்கரவாத பயிற்சி பெற்றதும், ஒருவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளதாக ஐஜி விஜய் குமார் கூறினார்.
  Next Story
  ×