search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமரீந்தர் சிங்
    X
    அமரீந்தர் சிங்

    சித்து திறமையற்றவர், அவரை முதல்வராக ஏற்க மாட்டேன் -அமரீந்தர் சிங்

    சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அமரீந்தர் சிங் கூறினார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், அடுத்த முதல்வராக சித்துவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறி உள்ளார். 

    இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர், அவர் ஒரு பேரழிவாக இருக்கப் போகிறார். அடுத்த முதல்வருக்கான போட்டியில் அவரது பெயரை பரிந்துரை செய்தால் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×