என் மலர்
செய்திகள்

கேரளாவில் பரவுவது வீரியம் அதிகமான கொரோனா வைரஸ்- முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் கொரோனா பரவலின் 2-வது அலை மிக மோசமாக உள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது பரவுவது வீரியம் அதிகமான கொரோனா வைரஸ் ஆகும். எனவே 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சையை ஒருங்கிணைப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். வீடுகளில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 41 ஆயிரத்து 971 பேர் புதிதாக கொரோனா தோற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 64 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. 14 லட்சத்து 43 ஆயிரத்து 633 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.