என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
தடுப்பூசி போடுவதில் பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை- சத்தீஷ்கர் முதல்வர் வலியுறுத்தல்
By
மாலை மலர்30 April 2021 5:30 AM GMT (Updated: 30 April 2021 5:30 AM GMT)

தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமின்றி ஆன்-சைட் பதிவும் கிடைக்க வேண்டும் என்று சத்தீஷ்கர் முதல்வர் கூறி உள்ளார்.
ராய்ப்பூர்:
நாடு முழுவதும் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் திட்டமிட்டபடி, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னுரிமையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யும் நடைமுறை காரணமாக யாரும் தடுப்பூசி கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என்பதால், ஆன்-சைட் பதிவும் கிடைக்க வேண்டும் என்று முதல்வர் யோசனை கூறி உள்ளார்.
Next Story
×