search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகம்

    பாதுகாப்பு துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இந்த நிலையில் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. கடந்த 2020-2021-ம் நிதியாண்டில் 4.71 லட்சம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியாண்டில் 19 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

    4.78 லட்சம் கோடி ரூபாயில் 1.15 கோடி ரூபாய் பென்சனுக்காக செலவிடப்படும். கடந்த பட்ஜெட்டில் 1.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 1.15 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

    மொத்த வருவாய் செலவினம், சம்பளம் செலுத்துதல் மற்றும் நிறுவனங்களை பராமரித்தல் ஆகியவற்றுக்கான செலவுகளை உள்ளடக்கியது ரூ. 2.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவு 1.35 லட்சம் கோடியாகும். இதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல் போன்றவற்றை வாங்க முடியும்.
    Next Story
    ×