search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாதித்துக்காட்டிய தாராவி - முதல்முறையாக இன்று யாருக்கும் கொரோனா பரவவில்லை

    மும்பையின் தாராவியில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. ஆனால், முதல் முறையாக அங்கு இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை.
    மும்பை:

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி உள்ளது. இங்கு மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம். வெறும்  2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்த்து வருகின்றனர்.

    இதற்கிடையில், உலகையே உலுக்கி வந்த கொரோனா வைரஸ்  கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தாராவியில் அடியெடுத்து வைத்தது. தாராவியில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டது.

    மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம் என்பதால் தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மத்திய, மாநில அரசுகள் தாராவியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தினர். அதன் பயனாக அங்கு கொரோனா வேகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி தாராவியில் 3 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில், கொரோனா பரவிய ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து முதல்முறையாக தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பது மக்களுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும், மத்திய அரசுக்கும் நற்செய்தியை அளித்துள்ளது.    
    Next Story
    ×