என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  உரிமையாளர்களிடம் வாடகை தருவதாக கூறி மோசடி- 29 கார்களை திருடிய 5 பேர் கும்பல் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாகன உரிமையாளர்களிடம் வாடகை தருவதாக கூறி காரை பெற்று வெளிமாநிலத்தில் விற்று வந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 29 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  மும்பை:

  நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் வர்மா. இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் பாயிண்ட் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் கார் உரிமையாளர்களிடம் காரை பெற்று கொண்டு வாடகை தராமல் மோசடி செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.

  இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சத்தியபிரகாஷ் வர்மா தனது கூட்டாளிகளான அந்தோணி பால், அஷிஷ் கங்காராம் ஆகியோருடன் சேர்ந்து கார் உரிமையாளர்களிடம் நட்சத்திர ஓட்டல்கள், காப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு கார் தேவைப்படுவதாகவும், இதற்காக மாதந்தோறும் வாடகை தருவதாகவும் கூறி கார் மற்றும் வாகன சான்றிதழ்களை பெற்று கொள்வர்.

  பின்னர் அந்த கார்களை குறைந்த விலைக்கு வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்து உள்ளனர். வாகன உரிமையாளர்கள் மாத வாடகை கிடைக்காததால் சத்தியபிரகாஷ் வர்மாவை தொடர்பு கொள்ளும்போது தொழில் முடங்கி இருப்பதால் காரை சில நாட்களில் தருவதாக கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்திய பிரகாஷ்சை பொய்சரில் கைது செய்தனர். அவர் கூறிய தகவலின் படி பெங்களூருவில் பதுங்கி இருந்த மற்ற 2 பேரை பிடித்து கைது செய்தனர்.

  இந்த மோசடியில் தொடர்புடைய குஜராத்தை சேர்ந்த முகமது வாசிம், ஜாவேத் அப்துல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 29 திருட்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  கைது செய்யப்பட்ட கும்பல் மீது ஏற்கனவே மும்பை அம்போலி, ஓஷிவாரா, ஆசாத் மைதான், விரார், ஒர்லி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
  Next Story
  ×