என் மலர்

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    சொந்த வாகனங்களுக்கு பதில் அரசு பஸ்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க சொந்த வாகனங்களுக்கு பதில் அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக சர்ச்தெருவில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தூய்மையான காற்று தெரு என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி நேற்றில் இருந்து அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 28-ந் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்தெருவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்வதற்கு மட்டுமே சர்ச்தெருவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச்தெருவில் வாகனங்கள் செல்ல தடை மற்றும் தூய்மையான காற்று தெரு திட்டத்தை நேற்று காலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக இன்று முதல் (அதாவது நேற்று) சர்ச்தெருவில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உலகத்தை காப்பாற்ற முதலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். பெங்களூருவில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு 10 சதவீத வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    சுற்றுசசூழல் மாசுபடுவதை தடுக்க பொதுமக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சைக்கிள், அரசு பஸ்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் தேவையாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பெங்களூருவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மந்திரி பைரதி பசவராஜ், ஹாரிஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×