என் மலர்

  செய்திகள்

  லெப்டினன்ட் ஜெனரல் ராஜூ
  X
  லெப்டினன்ட் ஜெனரல் ராஜூ

  குளிர்காலத்திற்கு முன் இந்தியாவுக்குள் 300 பயங்கரவாதிகள் ஊடுருவலாம் - அதிர்ச்சி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குளிர்காலத்திற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம் என்ற அதிர்ச்சி தகவலை லெப்டினன்ட் ஜெனரல் ராஜூ தெரிவித்துள்ளார்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  குளிர் காலம் தொடங்குவதற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம்.

  எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.  நம்முடைய எல்லை கண்காணிப்பு அமைப்பு வலிமையுடன் உள்ளது.

  பயங்கரவாத பாதையில் இருந்து விலகி வர விரும்பக்கூடிய இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்பதனை தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

  கடந்த சில மாதங்களில் 3 பயங்கரவாதிகள் சரண் அடைந்துள்ளனர். பயங்கரவாதத்தில் இருந்து விலகி வரக்கூடிய இளைஞர்களை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×