என் மலர்

    செய்திகள்

    நிர்மல் மாஜி
    X
    நிர்மல் மாஜி

    மேற்குவங்காள மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேற்குவங்காளத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி நிர்மல் மாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    கொல்கத்தா:

    மேற்குவங்காளத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் நிர்மல் மாஜி (வயது 59). மூளை பக்கவாத நோயால் அவதிப்பட்ட அவர், கடந்த மாதம் (செப்டம்பர்) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மந்திரி நிர்மல் மாஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மந்திரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×