என் மலர்

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
    X
    தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு வீசி தாக்கிய பயங்கரவாதிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். 

    அவ்வகையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் டவுன் பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்எப் வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டு விழுந்து வெடித்ததில் ஒரு வீரரின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சிஆர்பிஎப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

    தாக்குதல் நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.

    தெற்கு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஆதரவு அளித்து உதவிகள் செய்து வந்த நபர் கைது செய்யப்பட்ட மறுநாள் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×