என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தாராவியில் ரூ.2.40 கோடி ஹெராயின் பறிமுதல்- தையல் தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாராவியில் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தையல் தொழிலாளியை கைது செய்தனர்.
  மும்பை:

  மும்பை தாராவியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான மன்னார் சேக் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் போலீசார் அவரது வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

  இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 200 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் ஆகும்.

  இது தொடர்பாக போலீசார் மன்னார் சேக்கை கைது செய்தனர். மேலும் அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாராவியில் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×