என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
முதல்வரை தொடர்ந்து இமாச்சலப்பிரதேச மந்திரிக்கு கொரோனா
இமாச்சலப்பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராம்லால் மார்கந்தா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
சிம்லா:
இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் தெரிய வந்தது.
இந்த நிலையில் அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராம்லால் மார்கந்தா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால், டாக்டர்களின் அறிவுரைப்படி என்னை நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரையும் சேர்த்து இதுவரை இமாச்சலப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் அமைச்சர்கள் சுக்ராம் சவுத்ரி, மகேந்தர் சிங் தாகூர் ஆகியோர் குணமடைந்து விட்டனர். இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 12 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Next Story