search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    இது வெட்கக்கேடான உண்மை... ஹத்ராஸ் சம்பவம் குறித்த செய்தியை மேற்கோள் காட்டி ராகுல் விமர்சனம்

    ஹத்ராஸ் சம்பவம் குறித்து வெளியான ஆங்கில செய்தியை மேற்கோள் காட்டி, உ.பி. அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். 

    இதற்கிடையே ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் அந்த 19 வயதுப் பெண்ணின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார் என்றும் உ.பி. காவல்துறை கூறி உள்ளது.

    இது தொடர்பாக பிபிசி விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஹத்ராஸ் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய நிலையில், போலீசார் மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தது. சாதி பாகுபாடு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி எம்பி இன்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

    அதில், ‘வெட்கக்கேடான உண்மை என்னவென்றால், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை. யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று முதல்வரும் அவரது காவல்துறையினரும் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கும், மேலும் பல இந்தியர்களுக்கும், அந்த பெண் முக்கியம் இல்லை’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×