search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
    X
    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

    வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

    வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒருமித்த முடிவால் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடர்ந்து இருக்கும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.  ரெப்போ விகிதம் குறையும்போது வீட்டு கடன் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

    இதுபற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக நீடிப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.  இதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.

    நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு வரையில் தேவைப்பட்டால், நடப்பிலுள்ள நிதி கொள்கை நிலைப்பாட்டை தொடருவது என்றும் நிதி கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  வங்கி வட்டி விகிதம் மாற்றமின்றி 4.2% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 3.35% ஆகவும் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

    2021ம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5% வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பணவீக்கம் செப்டம்பரில் தொடர்ந்து உயரும் என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.  ஆனால், 3வது மற்றும் 4வது காலாண்டில் இலக்கை நோக்கி பணவீக்கம் மெல்ல நகர கூடும் என்றும் எங்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×