என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

ஆந்திரா, கர்நாடகா 2 மாநில முதல்-அமைச்சர்கள் திருப்பதி வருகை

திருப்பதி:
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கருடசேவையின் போது அரசு சார்பில பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதையொட்டி ஆந்திர மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு இன்று பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
இதையொட்டி அவர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
இதையடுத்து மாலை 5.45 மணிக்கு திருமலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகிறார். அங்கிருந்து தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து கொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சமர்ப்பிக்கிறார்.
கர்நாடகா அரசு சார்பில் திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா இன்று மாலை திருப்பதிக்கு வருகிறார்.
நாளை காலை 6.25 மணிக்கு ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆகியோர் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
பின்னர் 8.10 மணிக்கு கோவில் பின்புறம் ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ள பக்தர்களுக்கான ஓய்வறைக்கு முதல்-அமைச்சர்கள் ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பா ஆகியோர் அடிக்கல் நாட்டுகின்றனர்.
2 முதல்-மந்திரிகள் வருகையால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் ஏழுமலையான் கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.