என் மலர்

  செய்திகள்

  ஹரிவன்ஷ்
  X
  ஹரிவன்ஷ்

  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஹரிவன்ஷ் மாநிலங்களவை துணை சபாநாயகராக தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடாளுமன்ற மாநிலங்களவை துணை சபாநாயகராக ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.
  மாநிலங்களவையில் துணை சபாநாயகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த பி.ஜே. குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் இரண்டு முறை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஜே.குரியன். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இப்பதவிக்கான தேர்தல் தேதியை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார்.

  தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், எம்.பி.ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் நேற்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

  இன்று நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த ஹரிவன்ஷ் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு குரல் வாக்கெட்டுப்பு மூலம் வெற்றி பெற்றதாக அறிவி்ததார்.
  Next Story
  ×