என் மலர்

  செய்திகள்

  சரண் அடைந்த மாவோயிஸ்ட் தளபதி
  X
  சரண் அடைந்த மாவோயிஸ்ட் தளபதி

  திருந்தி வாழ்வதற்காக சரண் அடைந்த மாவோயிஸ்ட் தளபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகாரில் போலீசாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி சரண் அடைந்தார்.
  கயா:

  பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டு சரண் அடைந்து, திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு பொது மன்னிப்பும் வழங்கி வருகிறது. அத்துடன், அவர்கள் தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதனால் ஏராளமான மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர். 

  அவ்வகையில், போலீசாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு கமாண்டரான நேவல் புய்யான் என்பவர் கயாவில் நேற்று காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் முன்னிலையில் சரண் அடைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள், உரிய அறிவுரைகளை வழங்கினர். 

  பயங்கரவாத பாதையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப உள்ளதாகவும், இப்போது ஒரு புதிய உலகில் இருப்பது போல் உணர்வதாகவும் சரண் அடைந்த நபர் தெரிவித்தார்.
  Next Story
  ×