என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கொரோனாவின் கோரப்பிடியில் கர்நாடகா - இன்று மேலும் 9,464 பேருக்கு தொற்று உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் இன்று மேலும் 9,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  பெங்களூரு:

  கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

  இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 9,464  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,808 ஆக உயர்ந்துள்ளது.

  மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 12,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,34,999 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 98,326 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  Next Story
  ×