என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  ஆந்திராவில் இன்று மேலும் 10,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் இன்று மேலும் 10,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  அமாராவதி:

  ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. அதையடுத்து கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 10,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,27,512 ஆக அதிகரித்துள்ளது.

  ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது.

  தற்போது மாநிலம் முழுவதும் 97,271 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 9,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 4,25,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×