என் மலர்

  செய்திகள்

  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
  X
  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

  இந்திய-சீன எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்துள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்த நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
  இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன.  

  இதற்கிடையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்திய வீரர்களின் தாக்குதலுக்கு தாங்களும் தக்கப்பதிலடி கொடுத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

  ஆனால் சீனாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா எல்லைத்தாண்டி வந்தது சீனாதான் என தெரிவித்துள்ளது. மேலும், சீன வீரர்கள் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

  இதுமட்டுமல்லாமல் அருணாச்சலபிரதேசத்தின் எல்லையோர கிராமத்தை சேர்ந்த 5 பேர் எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சீன படையினர் பிடித்துவைத்துள்ளனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களால் இந்தியா-சீனா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

  இந்நிலையில், எல்லைப்பிரச்சனை மிகவும் தீவிரமடைந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் இது தொடர்பாக கூறியதாவது:-

  தற்போதைய சூழ்நிலையில், கடந்த மே மாதம் முதலே எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் மட்டத்திலான மிக மிக ஆழமான பேச்சுவார்த்தை தேவைப்படும் என்பதை எடுத்துரைக்கிறது. 

  என்றார்.

  இதற்கிடையில் தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ரஷியா சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அங்கு சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-வை சந்திக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

  Next Story
  ×