search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கேரளாவில் இன்று ஒரேநாளில் 3,026 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் புதிதாக 3,026 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரளாவில் புதிதாக 3,026 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், 163  பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்களுக்கும், 2,723 பேர் உள்ளூர் பரவல் மூலமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவில் இன்று 1,862 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தம் 68,863 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 23,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 1,98,850 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×