என் மலர்
செய்திகள்

என்95 முககவசம்
என்95 முககவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை
என்95 முகக்கவசம் தயாரிப்பு செலவு ரூ.18 தான். ஆனால் இதனை பல கடைக்காரர்கள் ரூ.200 வரை விற்று வருகிறார்கள். இதனை அவர்கள் உடனடியாக நிறுத்தவில்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் கொரோனா அதிகம் பாதித்த புனேயில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய பொருளான என்95 முககவசம் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் அவை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தப்பட்டு உள்ளனர். என்95 முகக்கவசம் தயாரிப்பு செலவு ரூ.18 தான். ஆனால் இதனை பல கடைக்காரர்கள் ரூ.200 வரை விற்று வருகிறார்கள். இதனை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story