search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அப்பாஜி கவுடா
    X
    அப்பாஜி கவுடா

    கர்நாடகாவில் ஜேடிஎஸ் மூத்த தலைவர் அப்பாஜி கவுடா கொரோனாவுக்கு பலி

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரான அப்பாஜி கவுடா கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா காலமானார். அவருக்கு வயது 67. 

    சிவமோகா மாவட்டம் பத்ராவதி தொகுதி முன்னாள் எம்எல்ஏவான  அப்பாஜி கவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், நெஞ்சு வலி ஏற்பட்டது. 

    இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ சத்யநாராயணா கடந்த மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×