என் மலர்
செய்திகள்

பரிசோதிக்கும் ஊழியர்
மகாராஷ்டிராவில் 14492 பேருக்கு கொரோனா - 6.5 லட்சத்தை கடந்தது பாதிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 14,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6.5 லட்சத்தைக் கடந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 14,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 14,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,942 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 297 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று கொரோனாவில் இருந்து 4,80,114 பேர் குணமடைந்துள்ளனர். 1,69,516 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story