என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இன்று 2,172 பேருக்கு தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  திருவனந்தபுரம்: 

  தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்தியதாக உலக அளவில் பாராட்டப்பெற்ற கேரளாவில், அண்மைக்காலமாக தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது அம்மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

  கேரளாவில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  கேரளா சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: 

  கேரளாவில் இன்று 2,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,292 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,354 ஆகும்.இதில், 36,539 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 19,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதன் முதலில் கொரோனா தொற்று பதிவானது. கேரளா அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்த அளவிலேயே அம்மாநிலத்தில் இருந்து. 168 நாட்கள் அதாவது 5.5 மாதங்களுக்கு பிறகு அம்மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது. ஆனால், ஜூலை 16 ஆம் தேதியில் இருந்து அடுத்த 12 தினங்களில் மேலும் 10 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அடுத்த 22 நாட்களில் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
  Next Story
  ×