search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ரெயில் பெட்டிகள் தயாரிப்புக்கான டெண்டரை கைப்பற்ற முயன்ற சீனா - டெண்டரை ரத்து செய்த இந்திய ரெயில்வே

    வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க விடப்பட்ட சர்வதேச அளவிலான டெண்டரை கைப்பற்ற சீனா முயற்சி செய்ததால் டெண்டரை இந்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.
    புதுடெல்லி:

    லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. சீனா மீது இந்தியா பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    குறிப்பாக டிக்டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், சீன நிறுவனங்களுடனான அரசின் வர்த்தக ரீதியிலான ஒப்பங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில், வந்தே பாரத் விரைவு ரெயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரெயில்வே சர்வதேச அளவிலான டெண்டர் விட்டது. 

    இந்த டெண்டரில் சில இந்திய நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், சர்வதேச அளவில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அந்த நிறுவனம் சீனாவை தலைமையாக சிஆர்ஆர்சி எலக்ட்ரானிக்ஸ் என்பது தெரியவந்தது. அந்நிறுவனம் வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்புக்கான டெண்டரை கைப்பற்ற முயற்சித்தது.

    இந்நிலையில், விரைவு ரெயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிப்பது தொடர்பாக விடப்பட்ட சர்வதேச டெண்டரை இந்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட டெண்டர் இன்னும் சில நாட்களில் மீண்டும் விடப்படும் எனவும் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×