என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறினார்.
  புதுடெல்லி:

  74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி கூறியதாவது:

  * அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.

  * நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் போர்க்களமாக உள்ளது.

  * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.

  * மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

  * நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது.

  * போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது

  *  பன்முகத்தன்மையே நமது பலம்

  * இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

  * பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.
   
  * சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.

  * இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது.

  * இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்

  * கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்

  *  சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

  *  ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்

  *  நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×