search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி
    X
    மாயாவதி

    இந்திய அரசு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும்: மாயாவதி நம்பிக்கை

    இந்தியாவின் பெருமையையும், புகழையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என்று நாட்டு மக்கள் நம்புவதாகவும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாயாவதி கூறி உள்ளார்.
    லக்னோ :

    லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு இருக்கும் நிலையில், சீனாவுடன் நடந்த மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அளிப்பதாகவும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    இந்தியாவின் பெருமையையும், புகழையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என்று நாட்டு மக்கள் நம்புவதாகவும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.

    மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த தேசமும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் மாயாவதி அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
    Next Story
    ×