என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா விமானம்
    X
    ஏர் இந்தியா விமானம்

    பைலட்டுக்கு கொரோனா பாதிப்பால் விமானம் திரும்பி வந்த விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு

    பைலட்டுக்கு கொரோனா பாதிப்பு தெரியவந்ததால் விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலையில் புறப்பட்டுச் சென்றது. விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றபோது, பைலட்டுகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பைலட்டை தொடர்பு கொண்ட விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக டெல்லிக்கு திரும்பும்படி உத்தரவிட்டனர்.

    இதனால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பிய ஏர் இந்தியா விமானம், மதியம் 12.30 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. அந்த பைலட் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    டெல்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக, பைலட்டின்  மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, சரியாக கவனிக்காமல் விட்டதே இந்த குழப்பத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, ஏர் இந்தியா வேறு விமானத்தை அனுப்ப ஏற்பாடு செய்தது.

    பைலட்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே  விமானத்தை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×