என் மலர்
செய்திகள்

மும்பை தாராவி
மும்பை- தாராவியில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1700க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் தாராவியில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
தாராவியில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






