search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து சுற்றி வரும் ராணுவ வீரர்கள்
    X
    ரோந்து சுற்றி வரும் ராணுவ வீரர்கள்

    ஜம்முவில் 5 மாவட்டங்களில் செல்போன் சேவை தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்முவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன் சேவையானது, 5 மாவட்டங்களில் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியாவுடன் முறைப்படி இணைத்தது.

    இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அங்குள்ள எதிர்ப்பாளர்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால், ராணுவம் குவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன. ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    தற்போது ஜம்மு பிராந்தியத்தில் பல்வேறு பகுதிகளில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனவே, ஜம்முவில் உள்ள தோடா, கிஷ்த்வார், ராம்பன், ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய 5 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று செல்போன் சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    இதேபோல் கடந்த 17-ம் தேதி ஜம்மு, ரீசி, சம்பா, கது மற்றும் உத்தம்பூர் ஆகிய மாவட்டங்களில் செல்போன் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டது. கடந்த வாரம் மத்திய காஷ்மீரில் உள்ள பத்காம், சோனமார்க் மற்றும் மணிகம் பகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ், தங்மார்க், உரி கிரன் கர்நாத் மற்றும் தாங்தார் பகுதிகளில் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×