search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவாதத்தின் மீது உரையாற்றிய அமித் ஷா
    X
    விவாதத்தின் மீது உரையாற்றிய அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது

    பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய மசோதாக்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய மசோதாக்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் மசோதா உள்பட 4 மசோதாக்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று காலை தாக்கல் செய்தார்.

    வாக்கெடுப்பு முடிவுகள்

    நேற்று பின்னிரவு வரை இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பின்னர் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், இன்று மக்களவையிலும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இரவு 7 மணிவரை நீடித்த விவாதங்களுக்கு பின்னர் இந்த 4 மசோதாக்கள் மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து 351 எம்.பி.க்களும் எதிர்த்து 72 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதன்மூலம் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மேலும், மாநில அந்தஸ்தை பறித்து இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீரை பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 361 எம்.பி.க்களும் எதிர்த்து 66 எம்.பி.க்களும் வாக்களித்தனர். மற்ற இரு மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
    Next Story
    ×