search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஆதிரா
    X
    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஆதிரா

    நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய போலீசார்

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கணவர் தப்பி சென்ற ஆத்திரத்தில் அவரது மனைவியை போலீசார் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது மனைவி ஆதிரா (23).

    அனீசுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் அனீஸ் தாக்கியதாக திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியதால் அனீசும், அவரது மனைவி ஆதிராவும் திருவல்லா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    திருவல்லா போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது அனீசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனால் பயந்து போன அனீஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச் சென்றனர்.

    அவர்கள் பிடியில் ஆதிரா மட்டும் சிக்கிக்கொண்டார். அனீஸ் தப்பித்த ஆத்திரத்தை அவர் மீது காட்டும் விதத்தில் ஆதிராவை 2 போலீஸ்காரர்களும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். ஷு காலாலும் அவரை மிதித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிலர் தங்களது செல்போனில் போலீசார் பெண்ணை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். மேலும் இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் சென்றது.

    நடுரோட்டில் ஆதிராவை போலீசார் கொடூரமாக தாக்கும் காட்சி.

    இதுபற்றி விசாரணை நடத்திய பத்தனம்திட்டா போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார், நடுரோட்டில் பெண்ணை தாக்கிய 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆதிரா தற்போது சிகிச்சைக்காக திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    Next Story
    ×