என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரசேகரராவ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காட்சி.
    X
    சந்திரசேகரராவ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காட்சி.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திருப்பதியில் தரிசனம்

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திருப்பதியில் இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்தார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தார்.

    திருமலைக்கு வந்த சந்திரசேகரராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சீனிவாசராஜூ, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.


    சந்திரசேகரராவும், குடும்பத்தினரும் திருமலையில் உள்ள கிருஷ்ணா விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
    Next Story
    ×