என் மலர்
செய்திகள்

தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு
பாராளுமன்ற தேர்தல் வெளியாகி, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இது குறித்து மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
புது டெல்லி:
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வரலாறு காணாத அளவு பாஜக தனிப்பெரும்பானமையுடன் அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் எஃகு கோட்டை ஆகும். இதனை தகர்த்து பாஜக 2வது இடத்தை பெற்றது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறுகையில், ‘மதவாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆக்கிரமிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய இரண்டுமே ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறது.
வங்காளத்தில் மறுமலர்ச்சி உதிப்பதற்கான சேவை புரியவே நான் இருக்கிறேன். மத ஆக்கிரமிப்புகளை விற்பனை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என ஒரு கவிதையையே தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த தொகுப்பினை ‘ஐ டோண்ட் அக்ரி’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். பாஜகவின் வெற்றியை ஏற்க மறுப்பதால், மம்தா இப்படி வெளியிட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களும், பாஜக 18 இடங்களும், மற்றவை ஓரிடமும் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
I Do Not Agree pic.twitter.com/RFVjiunJQt
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019

Next Story