search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் - வேட்பாளர் மகன் குற்றச்சாட்டு
    X

    டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் - வேட்பாளர் மகன் குற்றச்சாட்டு

    டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் என ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவானது ஆம் ஆத்மி கட்சி.

    ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ல் ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக நாளை டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது.



    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேற்கு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக எனது தந்தை பல்பீர் சிங் ஜாகர் போட்டியிடுகிறார். எனது தந்தை கட்சியில் சேர்ந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அங்கு போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நானே சாட்சி என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளரின் மகன் இப்படி பகிரங்கமாக பேட்டியளித்தது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் மகனது குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×