என் மலர்
செய்திகள்

இன்று 5ம் கட்ட தேர்தல் - 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடும் தொகுதிகள் உட்பட 51 தொகுதிகளில் 5-வது கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection #RajnathSingh #SoniaGanthi #RahulGanthi #SmritiIrani
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29-ந் தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இந்நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்று வரும் தேர்தலில் 8¾ கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 675 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்கின்றனர். இதில் 12 சதவீத பேர் பெண் வேட்பாளர்கள்.

இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5-வது கட்டத்துடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைய உள்ளது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் களின் தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.
5-வது கட்டத்துடன் 425 தொகுதிகளில் தேர்தல் முடிய உள்ளது. இதைத்தொடர்ந்து 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்டமாகவும், 19-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. #LokSabhaElection #RajnathSingh #SoniaGanthi #RahulGanthi #SmritiIrani

Next Story